ஹைதராபாத்;
ஹைதராபாதில் கடந்த 2007 ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பை செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது ஹைதராபாத் நீதிமன்றம்.

கடந்த 2007-ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி இரவு 7.45 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கத்தில் குண்டு வெடித்தது. இதில் 42 பேர் பலியாகினர். இந்த இரு குண்டு வெடிப்புகளிலும் மொத்தம் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.ஹைதராபாத்தின் தில்சுக் நகர் பகுதியில் வெடிக்காத குண்டு ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். இந்த குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள்தான் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. தாக்குதலில் தொடர்புடைய பங்கரவாதிகள் ஷாஃபிக் சையது, முகமது ஷாதிக், அக்பர் இஸ்மாயில் செளதரி, அன்சார் அகமது ஷேக் ஆகியோரை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படையினர் கடந்த 2008 அக்டோபரில் கைது செய்தனர்.
ஹைதராபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையில் 170 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து, தீர்ப்பு திங்கட்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.