வாலாஜாபேட்டை,
தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் தேனி குருசாமி தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் குறவன் உள்ளிட்ட 26 பிரிவினரை எஸ்.டி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் குறவன் இன மக்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடும் அராஜகப் போக்கைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக ரூ. 5 ஆயிரம் அளிப்பது என்றும் தீர்மானிக்கப் பட்டது. அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெறும் 2வது மாநில மாநாட்டிற்கு வரவேற்புக்குழு தலைவராக கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் வேலு, செயலாளராக மாநிலத் தலைவர் ஜி.ரவி, பொருளாளராக வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது.

அக். 24,25,26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில மாநாட்டிற்கான பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஏ.வி.சண் முகம், மாநில பொருளாளர் ஜி.பெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: