லக்னோ;
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை கரைக்கக் சென்ற பாஜக தலைவர்கள் படகு கவிழ்ந்து ஆற்றில் விழுந்தனர்.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி மறைந்தார். அதைத்தொடர்ந்து அவரது அஸ்தியை நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஆறுகளில் பாஜக-வினர் கரைத்து வருகின்றனர்.

அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், அம்மாநில பாஜக தலைவர் ரமாபதி ராம் திரிபாதி, ஹரிஷ் துவிவேதி எம்.பி., ராம் சவுத்ரி எம்எல்ஏ மற்றும் மூத்த பாஜக தலைவர்கள், வாஜ்பாய் அஸ்தியைக் கரைப்பதற்காக, பஸ்தி ஆற் றுக்குள் படகில் சென்றனர்.அப்போது பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது. இதில் பாஜக தலைவர்கள் பஸ்தி ஆற்றுக்குள் விழுந்தனர். தண்ணீரில் தத்தளித்த அவர்கள், நீண்ட இழுபறிக்குப் பின் கரைசேர்க்கப்பட்டு உயிர்தப்பித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: