புதுதில்லி;
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு களை செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நேரில் பார்வையிடுகிறார்.கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் தங்கள் வீடு, வாசல் மற்றும் உடமைகளை இழந்து 8.69 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆலுவா, சாலக்குடி, செங்ஙன்னூர், ஆலப்புழா, பத்த
னம்திட்டா ஆகிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழை மற்றும்
நிலச்சரிவு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள
பாதிப்புகளை செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நேரில் பார்வையிடுகிறார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கேரளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களை நேரில் பார்வையிடுகிறேன். மீனவர்களையும் சந்திக்க உள்ளேன். மேலும், இந்நேரத்தில் ஓய்வின்றி சேவை செய்த தன்னார்வலர்கள் மற்றும் இதில் பங்காற்றிய அனைவரையும் சந்திக்க உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: