மோடியின் விளம்பரப்படத்தை வைக்காவிட்டால் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் சப்ளை நிறுத்தப்படும் என்று பெட்ரோலிய நிறுவனங்கள் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி மற்றும் பாஜக 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. மாறாக உயர்பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஆதார் கட்டாயம் என மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து அமலாக்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் மோடி தலைமையிலான பாஜக அரசு மீது மக்கள் கடும் அதிருப்த்தியில் இருந்து வருகின்றனர். ஆனால் இந்த அதிருப்த்தியை பாஜக விளம்பரங்கள் மூலம் சரி செய்து விடலாம் என்று நம்புகிறது.
இதன் ஒரு பகுதியாக பொதுத் துறை நிறுவனங்களின் பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு வந்திருக்கும் உத்தரவில் பெட்ரோல் நிலையங்களில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும்என ஆயில் நிறுவனங்களின் அதிகாரிகள் மூலம் வாய் மொழி உத்தரவிடப்பட்டு வருகிறது. மேலும் அப்படி மறுக்கும் நிறுவனங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் சப்ளை நிறுத்தப்படும் எனவும் மிரட்டி வருகின்றனர்.
இதற்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள, இந்திய பெட்ரோலிய வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.எஸ். கோகி , இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் பங்குகளில் மோடியின் உஜ்வாலா யோஜனா குறித்த விளம்பர பதாகைகளை வைக்க வற்புறுத்தி வருகின்றன. தவறும் பட்சத்தில் பெட்ரோலியம் சப்ளை நிறுத்தப்படும் என்று மிரட்டுக்கின்றனர் என்று தெரிவத்துள்ளார்.
மேலும் கடந்த ஜூன் மாதம் பெட்ரோல் பங்குளில் பணிபுரியும் நபர்களின் தனிப்பட்ட தகவல்களை பெட்ரோலிய நிறுவனங்கள் கேட்டிருந்தன.
ஆனால் ஊழியர்களின் பெயர், திருமண தகுதி, பெற்றோர் பெயர் , ஆதார் எண், மதம், சாதி , மொபைல் எண், ஈமெயில் அட்ரஸ், மற்றும் கல்வித்தகுதி போன்றவற்றை அடிப்படை தகவல்களை தர முடியாது. இது எங்களின் தனிப்பட்ட உரிமையை கேள்விக்குறியாக்கும் செயல் ஆகும். ஆகவே நாங்கள் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது என முடிவு செய்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.