மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.

மேட்டுபாளையம் நகர பகுதியை அடுத்துள்ள மோத்தேபாளையம் கிராமத்தில் இரவு நேரங்களில் நுழையும் சிறுத்தையொன்று விவசாய தோட்டங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ள ஆடு, மாடு மற்றும் ஊருக்குள் சுற்றித்திரியும் தெரு நாய்களையும் கொன்று தனது உணவாக்கி வந்தது. இதனால் மோத்தேபாளையம் மற்றும்  இதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் மாலை நேரத்திற்கு பின்னர் வெளியில் நடமாடவே முடியாத சூழல் நிலவி வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து அளித்த புகாரின் அடிப்படையில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ள இடங்களில் வனத்துறையினர் கூண்டுகளை அமைத்தனர். கடந்த ஒரு மாத காலமாக மூன்று இடங்களில் அவ்வப்போது இடம்மாற்றி கூண்டு வைக்கப்பட்டிருந்த நிலையில்திங்களன்று அதிகாலை மோத்தேபாளையம் கிராமத்தில் உள்ள சென்னாமலைக்கரடு பகுதியில் வைக்கபட்டிருந்த கூண்டிற்குள் சிறுத்தை சிக்கியது. இதன்பின்னர், பிடிபட்ட சிறுத்தையானது கூண்டோடு மற்றொரு வாகனத்தில் ஏற்றப்பட்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: