ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2015 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல்
வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வாலிபருக்கு போக்சோ சட்டத்தின்கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத 5 வயது சிறுமியை ராம் சோனா என்ற வாலிபர் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் குற்றவாளியும், அவனுக்கு துணையாக இருந்த அவனது தாய் மற்றும் நண்பர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, துர்க் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், சிறுமியை வன்புணர்வு செய்து  கொலை செய்த குற்றத்துக்காக ராம் சோனாவுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த கொலையில் இருந்து அவனை காப்பாற்றுவதற்காக சிறுமியின் உடலை அப்புறப்படுத்த உதவி செய்த தாய் மற்றும் நண்பருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: