சென்னை,
சென்னை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 18 வயது நிரம்பிய மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

இம்முகாம்களில் முட நீக்கியல் வல்லுநர், தொண்டை, காது, மூக்கு மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் குழந்தைகளை பரிசோதனை செய்து மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை வழங்க பரிந்துரை செய்வார்கள். இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் குழந்தைகளின் 4 புகைப்படம், மருத்துவச் சான்றிதழ், அடையாள அட்டை நகல் மற்றும் பெற்றோர்களின் வருவாய் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். இச்சிறப்பு முகாம்கள் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் இடங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்டு தங்களின் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிகிச்சைகள் பெற்று பயனடையுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முகாம் நடைபெறும் இடங்களும் தேதியும்:
ராயபுரம் அரத்தூண்சாலையில் உள்ள சென்னை உருதுபள்ளியில் வரும் 28 ஆம் தேதி முகாம் நடைபெறும். இதுகுறித்து விவரம் அறிய 9788858511, 9789014961, 8939054854 ஆகியசெல்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். நந்தனம் சிஐடி நகரில் 4வது பிரதான சாலையில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் ஆக.28 அன்று இந்த முகாம் நடைபெறும். செல்பேசி எண்கள்: 9788858518,9444758150. 9789081918.

தி.நகர்:
ஆக.29அன்று திநகர் பனகல் பூங்கா அருகில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் முகாம் நடைபெறும். தொடர்பு கொள்ள 9788858517, 9940211634, 9445322173 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

சூளை:
சூளை வி.கே பிள்ளைத்தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் ஆக.29 அன்று முகாம் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 9788858512, 9840142460,9445249168 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பெரம்பூர் திரு.வி.கநகர்:
ஆக. 30 அன்று பெரம்பூர் திரு.வி.க.நகரில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியிலும் தேனாம்பேட்டை அருணாசலம் தெருவில் உள்ள சென்னை சமுதாய கல்லூரியிலும் முகாம் நடைபெறும். பெரம்பூர் முகாம் குறித்து 9788858513, 9043856276, 9790741543 ஆகிய எண்களிலும் தேனாம்பேட்டை முகாம் குறித்து 9788858515, 9788877955, 8939254871 ஆகிய செல்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

வள்ளுவர் கோட்டம்:
நுங்கம்பாக்கத்தில் வள்ளூவர் கோட்டம் (சுதந்திர பூங்கா அருகில்) உள்ள சென்னை மேல் நிலைப்பள்ளியிலும் சேத்துப்பட்டு மெக்நிக்கல்ஸ் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியிலும் முகாம் நடைபெறும். நுங்கம்பாக்கம் முகாம் குறித்து 9788858516, 9444049403, 9176383727 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். சேத்துப்பட்டு முகாம் குறித்து 9788858514, 7401331608, 8925067494 ஆகிய எண்களிலும் தொடர்புகொண்டு விவரங்களை கேட்டு பெறலாம் என்று சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: