திருவண்ணாமலை;
திருவண்ணாமலை வேளாண் கல்லூரி உதவிப் பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த மாணவி, அது தொடர்பான ஆவணங்களை திங்களன்று (ஆக. 27) காவல்துறையினரிடம் அளித்தார்.திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூ ரில் அரசு வேளாண் கல்லூரி மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு பி.எஸ்சி 2 ஆம் ஆண்டு படிக்கும் சென்னை பெருங்குடியைச் சேர்ந்த மாணவி, தனக்கு கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் தங்கபாண்டியன் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வருவதாக புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியிடம் மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வானாபுரம் காவல்துறையினர் விசார ணை நடத்தி வருகின்றனர். இந்த புகாரின் அடிப்படையில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் தொல்லைக்கு விடுதி வார்டன்களாக உள்ள கல்லூரி பேராசிரியைகள் புனிதா, மைதிலி ஆகியோர் உடந்தையாக இருந்ததாக மாணவி குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து, பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த பாலியல் புகார் தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.

புதிய புகார்
இந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதவி பேராசிரியர் தரப்பில் இருந்து தனக்கு பணம் கொடுப்பதாகவும், வழக்கை திரும்ப பெறுமாறும் மிரட்டல் வருவதாக மாணவி புதிய புகார் கூறினார். காவல்துறையினரின் விசாரணை ஒருதலைபட்சமாக உள்ளது. என் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காவல்துறையினர் செயல்படுவதாகத் தெரிகிறது என்றும் மாணவி கூறியிருந்தார்.

இதனிடையே, பாலியல் புகார் தொடர்பாக மாணவியின் தோழிகள் 4 பேரிடம் விசாரிக்க கூடுதல் காவல்கண்காணிப்பாளர் வனிதா விசார ணைக்கு அழைத்துள்ளார். அந்த  விசாரணையில் தோழிகள் கூறுவதை வைத்து புகாரின் உண்மை தன்மையை உறுதிப்படுத்திய பிறகு உதவி பேராசிரியர், பேராசிரியைகள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்வது
அல்லது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்லூரியில் திங்களன்று (ஆக.27) நடந்த தேர்வை இந்திய மாணவர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் அன்பரசன், சிபிஎம் வட்டாரச் செயலாளர் அண்ணாமலை ஆகியோர் பாதுகாப்புடன் வந்து மாணவி எழுதினார். பின்னர், உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியைகள் பேசிய ஆடியோ சி.டி.க்களை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.