செங்கல்பட்டு,
நியாயவிலைக் கடைகளில் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கூட்டுறவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் 6 ஆவது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமையில் செங்கல்பட்டில் ஞாயிறன்று (ஆக. 26) நடைபெற்றது.  மாவட்ட துணைத் தலைவர் ஆர்.தாமோதரன் வரவேற்றார். இணைச் செயலாளர் வி.சீனுவாசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் துவக்கிவைத்தார். செயலாளர் எம்.ஏகாம்பரம் வேலை அறிக்கையும், பொருளாளர் எம்.பலகிருஷ்ணன் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். கூட்டுறவு சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். புண்ணியக்கோட்டி நன்றி கூறினார். கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிவரன்முறை, மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம் வழங்க வேண்டும், நியாயவிலைக் கடையைத் தொடர்ந்து நடத்த உறுதி செய்திட வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும், நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு, நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், நியாயவிலைக் கடைகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும், கைத்தறி கூட்டுறவு சங்க பணியாளர்களின் புதிய ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் தள்ளுபடி மானியத்தை வழங்க வேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி கடன் தள்ளுபடி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பலவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்:
மாவட்டத் தலைவராக எம்.ஏகாம்பரம், செயலாளராக எம்.பாலகிருஷ்ணன், பொருளாளராக புண்ணியக்கோட்டி உள்ளிட்ட 25 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.