புதுக்கோட்டை;
கேரளாவில் 40 தமிழக  மருத்துவக் குழு சிகிச்சை
கேரள மாநிலத்திற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 200 நபர் கொண்டு 40 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 40 மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவக் குழுவில் இணை இயக்குநர், சுகாதார ஆய்வாளர்கள், பூச்சியல் வல்லுநர்கள் உள்ளிட்ட 200 நபர் உள்ளனர். இந்த மருத்துவக் குழு மூலம் 322 மருத்துவ முகாம் நடத்தப்பட்டு இதுவரை 20,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

கொள்ளிடம்:
விரைவில் டெண்டர்
‘உடைந்த கொள்ளிடம் பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. புதிய பாலத்துக்கான வரைபடம் மற்றும் இடம் சர்வே பணி நடந்து வருகிறது. விரைவில் புதிய பாலம் கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கும்’ என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவனந்தபுரம்:
ஒன்றரை ஆண்டு தேவை
‘கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக மொத்தம் 34,732 கிலோ மீட்டர் சாலைகள், 218 பாலங்கள் சேதமடைந்துள்ளன.சாலைகள், பாலங்களைச் சீரமைக்க ஒன்றரை ஆண்டுகள் ஆகும்’ என்று கூறப்படுகிறது. போர்க்கால அடிப்படையில் முக்கிய சாலைகளைச் சீரமைக்க
அரசு முதற்கட்டமாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

புதுதில்லி:
வாட்ஸ் அப்-க்கு நோட்டீஸ்
வாட்ஸ் – அப் தொடர்பான வழக்கு ஒன்றில், ஏன் வாட்ஸ்  – அப் நிறுவனத்தில் இந்தியாவுக்கான குறைதீர்க்கும் அதிகாரி நியமிக்கப்படவில்லை? என்பது தொடர்பாக 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என வாட்ஸ் – அப் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் உள்ளிட்டவற்றுக்கு திங்களன்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுதில்லி;
தகவல் அளிக்க மறுப்பு!
பா.ஜ.க தேசியத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமித் ஷா-வின் பாதுகாப்புச் செலவு தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘மத்திய தகவல் ஆணையம் தகவல் அளிக்க மறுத்துவிட்டது. தனி நபர் பாதுகாப்பு தொடர்பான எந்தத் தகவலையும் வெளியிட முடியாது’ என உள்துறை அமைச்சகம் தெரிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

நியூயார்க்:
துப்பாக்கிச் சூடு : 4 பேர் பலி
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில்லே என்ற இடத்தில் வீடியோ கேம் விளையாட்டு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அப்போது, மர்ம நபர் ஒருவர், திடீரென துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் முதற்கட்ட விசாரணையின் படி 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply

You must be logged in to post a comment.