மும்பை;
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்று சிவசேனா சந்தேகம் கிளப்பியுள்ளது.

செங்கோட்டையில், மோடி தேசியக்கோடியேற்றுவது தடைபடக்கூடாது என்பதற்காக- வாஜ்பாய் மரணச்செய்தியை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு மாற்றியிருக்கிறார்கள் என்றும் சிவசேனா குறிப்பிட்டுள்ளது.“முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகஸ்ட் 16-ஆம் தேதி தான் இறந்தாரா? என்ற சந்தேகம் உள்ளது; ஏனெனில் ஆகஸ்ட் 12, 13 தேதிகளிலேயே அவரது உடல்நிலை கவலைக்கிடமானதாக தகவல்கள் தெரிவித்தன” என்று சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.
“ஆகஸ்ட் 15-க்கு முன்னதாகவே வாஜ்பாய் இறந்ததை அறிவித்தால், தேசியக்கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட வேண்டும், தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி உரையாற்றும் இல்லாமல் போய்விடும் என்பதற்காகவே வாஜ்பாய் மரண அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.