தூத்துக்குடி,
தூத்துக்குடி குமரெட்டையாபுரத்தில் ஸ்டெர்லைட் பெண் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியதாகவும், அவரது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், மின் கசிவால் வீடு தீப்பற்றியதாக மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையால் நீர், நிலம், காற்றுமாசு ஏற்பட்டு மக்கள் கொடிய நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகினர். எனவே, ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பேரணியாக சென்ற மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக் கிச் சூடு நடத்தி 13 பேரை கொலை செய்தனர். அதை தொடர்ந்து ஆலையை மூடதமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், பசுமைத்தீர்ப்பாயத்தின் உதவியுடன் ஆலைக்குள் நுழையும் முயற்சியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.  அண்மையில் நிர்வாக பணிகளுக்கு ஊழியர்களை அனுமதிக்க பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. உள்ளூர் மக்களில் சிலர் உணவக பணிக்காக ஆலைக்குள் சென்றுள்ளனர். இதற்கு குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் குமரெட்டையாபுரத்தை சேர்ந்த துரைராஜ் மனைவி ஜெயா (38) ஸ்டெர்லைட் தொழிற் சாலையில் உள்ள கேன்டினில் பாத்திரம் கழுவும் வேலை செய்து வருகிறார். சனிக்கிழமை இரவு ஜெயா வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, குமரெட்டையாபுரம் ராமசாமி மகன் குட்டி என்றபெத்துராஜ் (30), முருகபெருமாள் மகன் பாபுராஜ் (33) ஆகிய இருவரும் ஜெயாவை வழிமறித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். நீ எப்படி அங்கு வேலை செய்யலாம் என கூறவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கே வந்த ஜெயாவின் மகன் மணிகண் டன் (18), முருகேசன் என்பவரது மகன் ராம்குமார்(28) ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர். இது கோஷ்டி மோதலாகமாறியது. தகவல் அறிந்து அங்கு சென்ற சிப்காட் காவல்துறையினர் குட்டி என்ற பெத்துராஜ் மற்றும் பாபுராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத் தால் குமரெட்டையாபுரம் கிராமத்தில் பதற்றம் உருவாகியுள்ளது. அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஜெயாவின் தந்தை கந்தசாமி (90). என்பவரின் குடிசைவீடு தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இவரது வீட்டிற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தான் தீ வைத்ததாக ஜெயாவின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் மின்கசிவு தான் விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மக்களை மோதவிட்டு, அதன்மூலம் எதிர்ப்பை தணிக்க திட்டமிட்டு செயல்படுவதாக குமரெட்டையாபுரம் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.