சென்னை, சென்னை கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் பள்ளியில் ஒன்று மற்றும் இரண்டாம்
வகுப்பு மாணவர்கள் சார்பில் கண்காட்சி நடைபெற்றது.

ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் நடத்திய ‘டெக்வில்’ என்னும் கண்காட்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான மாதிரிகளை மாணவர்கள் அழகாக வடிவமைத்திருந்தனர். இதில் அறிவியல் உண்மைகள், கண்டுபிடிப்புகள், உணவு மற்றும் உணவு விதிகள், விண்வெளி அறிவியல்,உயிரியல், ஸ்வச் பாரத் பற்றிய நடனம் போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றன.இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ‘பேபில் சோன்’ என்ற தலைப்பில் திகில், நீதி, கற்பனைக் கதைகள், தலைவர்களின் கதைகள், நகைச்சுவைக் கதைகள், ஆங்கில நாடகங்கள் என மாணவர்கள் கதைகளுடன் நடித்துக் காட்டினர். இந்த கண்காட்சியில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளியின் சி.இ.ஓ. மகேஸ்வரி, சீனியர் முதல்வர் புருஷோத்தமன், முதல்வர் கலையரசி, இயக்குநர் வித்யா, துணை முதல்வர் கலைவாணி ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.

Leave A Reply

%d bloggers like this: