சென்னை,
தமிழ்நாடு அரசு முறைசாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி அமைப்புசாரா தொழில்களின் பொதுத்தொழிலாளர் சங்கம் வடசென்னை மாவட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிலுவைத்தொகையுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும், யானைக்கவுனி மேம்பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும், பொன்னோரியில் உள்ள நலவாரிய அலுவலகத்தின் கிளையை திருவொற்றியூரில் அமைக்க வேண்டும், வியாசர்பாடி குளக்கரை சாலையில் உள்ள அரசு மருத்துவமனை மீண்டும் திறக்கப்பட்டு தாய், சேய் நலத்தை பராமரிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஞாயிறன்று நடைபெற்ற பேரவையில் வடசென்னை மாவட்ட துணைச்செயலாளர் டி.வெங்கட் வரவேற்றார். மாவட்டத்தலைவர் பி.என்.உண்ணி தலைமை தாங்கினார், எஸ்.வேலு அஞ்சலி தீர்மானத்தைவாசித்தார். துணைச் செயலாளர் இரா.மணிமேகலை வேலை அறிக்கையையும் பொருளாளர் கே.ஜீவானந்தம் நிதிநிலை அறிக்கையையும் சமர்பித்தனர்.

சிஐடியு வடசென்னை மாவட்டத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன் மாநாட்டை வாழ்த்தி பேசினார். நிர்வாகிகள் எம்.ஆதிகேசவன், எஸ்.ஜெகநாதன், வேணுகோபால், கே.சுகுமார் ஆகியோர் பங்கேற்றனர். அமைப்பு தொழில்களின் பொதுத்தொழிலாளர் சங்கம் வடசென்னை மாவட்டத் தலைவராக பி. என். உண்ணி, செயலாளராக இரா.மணிமேகலை, பொருளாளராக கே.ஜீவானந்தம் உள்ளிட்ட 13 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது.நிறைவாக ஆர்.சூசைமேரி நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.