புதுதில்லி :

கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் கனமழையை அளித்துள்ளது. இம்மழையினால் நாட்டின் சில மாநிலங்களில், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளங்களிலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி 993 பேர் பலியாகியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கானோர் வீடுகள் உள்பட தங்களின் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இப்பருவ மழையினால் வரலாறு காணாத வகையில் கேரள மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியதால் அம்மாநிலம் பேரிடர் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக சுமார் 400 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 54லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் 204 பேரும், மேற்குவங்காளத்தில் 195 பேரும் கர்நாடகாவில் சுமார் 161 பேரும் மற்றும் அஸ்ஸாமில் 46 பேரும் என சுமார் 600 பேர் பலியாகியுள்ளனர். இந்த பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நாடு முழுவதும் சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 17 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்கி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.