கோவை,
ஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதலை உருவாக்கும் விதமாக நடந்து கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக, சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.கே.சுகுமாறன், தலைவர் இர.செல்வம், சு.ப.பழனிச்சாமி உள்ளிட்ட மற்றும் காளப்பட்டி, சித்ரா பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவையை அடுத்த காளப்பட்டி பகுதியில் டாடா மேஜிக் ஸ்டாண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 120-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்த சூழலில், சங்க உறுப்பினர்களைத் தவிர்த்து வெளி ஆட்கள் பலர் இந்த ஆட்டோ நிறுத்தத்தில் வந்து இடையூறு செய்கின்றனர். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உடந்தையுடன் தகராறு செய்து வருவதால் ஆட்டோ ஓட்டுநர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வருகிறது. ஆகவே,அவ்விடத்தில் புதிய ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்கக்கூடாது. இதைமீறி இடையூறு செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: