ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சிந்து,ஜப்பானின் யமகுச்சியை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 21-17 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவின் சிந்து கைப்பற்ற,இரண்டாவது செட்டை 15-21 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி ஜப்பானின் யமகுச்சி பதிலடி கொடுக்க ஆட்டம் சூடு பிடித்தது.வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் சிந்துவின் அதிரடி ஆட்டத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் யமகுச்சி திணறினார்.பரபரப்பாக நடைபெற்ற மூன்றாவது மூன்றாவது செட்டை 21-10 என்ற புள்ளிக் கணக்கில் சிந்து கைப்பற்றின்னார்.இறுதியில் 21-17,15-21,21-10 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சிந்து வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.இறுதிப்போட்டியில்,உலகின் முதல் நிலை வீராங்கனையான சீன தைபே வீராங்கனை டாய் ஜூ யிங்கை எதிர்கொள்கிறார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி பேட்மிண்டன் (ஒற்றையர்) பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சிறப்பு பெருமையைப் சிந்து பெற்றுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: