புதுதில்லி;
தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பில் தில்லியில் திங்களன்று அனைத்து கட்சிகளும் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில் 7 தேசியக் கட்சிகள், 51 மாநில கட்சிகளின்
பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.தேர்தலில் பெண்களை அதிக அளவில் பங்கு பெறச் செய்வது பற்றி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையர்கள் கூறுகையில், ‘‘அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட அதிக பெண் களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்’’ என்றனர்.இதன் பின்னர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் களின் செலவை குறைப்பது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்தலின் போது அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளுக்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்யலாமா என்றும் கூட்டத்தில் கருத்து கேட்கப்பட்டது.
இதையடுத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் காலச் செலவு பற்றி பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பான சர்ச்சை பற்றி விவாதிக்கப்பட்டது. அதன் மீதான விவாதத்தில் தி.மு.க. பிரதிநிதி டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ‘‘வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப் பான வகையில் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்’’ என்று கூறினார்.காங்கிரஸ் சார்பில், ‘‘வாக்குப்பதிவு எந்திரத்தை கைவிட்டு விட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலைநடத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.