அகமதாபாத் :

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் அரசு வீட்டு வசதி வாரியத்தின் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உடல் நசுங்கி பலியானர். மேலும், இடர்பாடுகளில் இருந்து 4 பேரை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.

அகமதாபாத் நகராட்சி கழகத்திற்கு உட்பட்ட 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் 4 மாடி கட்டிடம் நேற்று இரவு இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் மோசமான நிலை கருதி இக்குடியிருப்பில் தங்கியிருந்தவர்களை வெளியேறும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதால் அதில் தங்கியிருந்த பெரும்பாலானோர் வீட்டை காலிசெய்தனர்.

”அறிவுறுத்தலை மீறி தங்கியவர்கள் இந்த விபத்தில் சிக்கி கொண்டார்கள். 12 மணிநேர மீட்பு பணிக்கு பிறகு இடிபாட்டில் நசுங்கி உயிரிழந்த ஒருவரின் உடல் மீட்கபட்டுள்ளதாகவும், 4 பேர் மீட்கபட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.” இவ்வாறு தீயணைப்பு துணை தலைமை அலுவலர் ராஜேஸ் பத் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: