சென்னை:
உலக வெப்பமயமாதல் சவால்களை சமாளிக்க வேதங்களில் உத்திகள் உள்ள தாக கூறுகிறார்கள் என்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் மன் கீ பாத் (மனதின் குரல்) என்ற தலைப்பில் ஆகஸ்ட் 26 ஞாயிறன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது: ஒவ்வொரு மொழிக்கும் ஒரு மகத்து வம் உள்ளது. தமிழ் மொழி உலகின் மிகத்தொன்மையான மொழி என்பதில் அனைவருக்குமே பெருமிதம் உள்ளது. சமஸ்கிருத மொழியும் அறிவை பரப்ப மிகப்பெரும் பங்களிப்பை செய்து வந்துள்ளது. உலக வெப்பமயமாதல் முன்வைக்கும் சவால்களை சமாளிக்கும் உத்திகள் வேதங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருப்பதாக கூறு கிறார்கள்.

கேரளத்தின் பயங்கரமான வெள்ளத் தால் மக்களின் வாழ்க்கை எந்த அளவுக்கு மோசமாக பாதிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். இந்த கடினமான சூழ்நிலையில் தேசம் கேரளத்துக்குத் துணையாக நிற்கிறது. தங்கள் உடைமைகளை இழந்த வர்கள், வெள்ளம் ஏற்படுத்திய துயரத்தில் இருப்பவர்களின் குடும்பங்களின் வேத னையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் துக்கத்தை முழுமையாக ஈடு செய்ய முடியாது என்றாலும், துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு நான் அளிக்கக்கூடிய நம்பிக்கை என்ன வென்றால், 125 கோடி இந்தியர்களும் உங்களுடன் தோளோடு தோள் நிற்கிறார்கள். இந்த இயற்கைப் பேரிடரில் காயமடைந்தவர்கள் விரைவாக நலம் பெற வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. மாநில மக்களின் பேரார்வமும், அளப்பரிய ஆற்றலும் கேரளத்தை மீண்டெழச் செய்யும் என்று முழுமையாக நம்புகிறேன்.

மக்களவையில் 21 மசோதாக்களும், மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் ஆணையத்திற்கு இணையாக இதர பிற்படுத்தப் பட்டோருக்கான திருத்த மசோதாவும் நிறை வேற்றப்பட்டது. 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: