ஈரோடு,
வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை வலுப்படுத்திடக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பவானி தாலுகா 3 ஆவது மாநாடு ஞாயிறன்று ஜம்பை வீரமாத்தியம்மன் சமூகக்கூடத்தில் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் என்.பாலசுப்பிரமணியம் துவக்க உரையாற்றினார். தாலுகா செயலாளர் பி.மாதையன் அறிக்கையை முன்வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் பி.பி.பழனிச்சாமி, மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் வி.நடராஜன், சிஐடியு செயலாளர் ஏ.ஜெகநாதன், தமிழ்புலிகள் கட்சியின் மாவட்ட துணைசெயலாளர் கு.செம்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.இம்மாநாட்டில், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை வலுப்படுத்திட வேண்டும். சாதி ஆணவ படுகொலைகளை தடுத்திட வேண்டும். பவானி தாலுகாவில் குடிநீர், கழிப்பிடம்,சுடுகாடு உள்ளிட்ட அடிப்படைவசதிகளை ஏற்படுத்திட வேண்டும். மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினமான செப்.30 ஆம் தேதியன்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் நடைபயணம் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, இம்மாநாட்டில் தீ.ஒ.முன்னணியின் தாலுகா தலைவராக பன்னீர்செல்வம்,செயலாளராக எஸ்.மாணிக்கம். பொருளாளராக பி.வீராசாமி, துணை தலைவராக பி.குப்பன்,துணை செயலாளராக பி.மாதையன் உட்பட 16 பேர் கொண்ட புதிய கமிட்டி உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் மாவட்டத் தலைவர் எம்.அண்ணாதுரை நிறைவுரையாற்றினார். இம்மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.