நாமக்கல்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு மற்றும் தீக்கதிர் சந்தா ஒப்படைக்கும் பேரவை கூட்டம் ஞாயிறன்று ராசிபுரத்தில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராசிபுரம் வெண்ணந்தூர் பிரதேசகுழுவின் சார்பில் கட்சி வளர்ச்சி நிதி மற்றும் தீக்கதிர் சந்தா ஒப்படைக்கும் சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயிறன்று ராசிபுரம் விஜயலட்சுமி மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சியின் பிரதேச குழு செயலாளர் ஜீ.செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மூத்த தோழர் எம்.ஜி.ராஜகோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சுரேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதைத்தொடர்ந்து ராசிபுரம் பிரதேசத்திலுள்ள கட்சி கிளையின் சார்பில் கட்சி வளர்ச்சி நிதியாக பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய், கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமியிடம் வழங்கப்பட்டது. மேலும், தீக்கதிர் நாளிதழின் 16 சந்தாக்களும் ஒப்படைக்கப்பட்டன. முடிவில், நகரக் கிளை செயலாளர் சி.சண்முகம் நன்றி கூறினார். இந்த பேரவை கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.