திருநெல்வேலி,
நெல்லையில் நடைபெற்ற பேரவையில் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட குழு அலுவலகத்தில் தீக்கதிர் வளர்ச்சி நிதி வழங்கும் சிறப்பு பேரவை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.கணபதி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ் வெங்கட்டராமன், மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் ஆகியோர் பேசினர். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பேரவையில் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக வாசுதேவநல்லூர் கமிட்டி -ரூ.5,500, சங்கரன்கோவில் கமிட்டி ரூ. 8 ஆயிரம், நெல்லை கமிட்டி ரூ.15ஆயிரம், தென்காசி கமிட்டி ரூ.5ஆயிரம், சிறப்பு கமிட்டி ரூ.3,500 என மொத்தம் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: