கோவை :

நகர்ப்புற வளர்ச்சியும், பூர்வ குடி மக்களின் வாழ்விடங்களும் என்ற தலைப்பிலான ஆவணப்பட வெளியீடு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி வடகோவையிலுள்ள ஆதித்தமிழர் அரங்கில் நடைபெற்றது.

ஜனநாயக சுகாதாரப்பணியாளர் மய்யம் சார்பாக ” நகர்ப்புற வளர்ச்சியும், பூர்வ குடி மக்களின் வாழ்விடங்களும் ” என்ற தலைப்பில் சி எம் காலனி மக்களின் வாழ்க்கையை விளக்கும் ஆவணப்பட வெளியீட்டு விழா வடகோவையிலுள்ள ஆதித்தமிழர் அரங்கில் நடைபெற்றது. இந்த ஆவணப்படத்தில் கோவை நகரின் மையப்பகுதியான வெரைட்டி ஹால் சாலையிலுள்ள சி எம் சி காலனி மக்களை வீடு கட்டிக்கொள்ள மாநகராட்சி அனுமதி அளித்தது. பின்பு காலி செய்யச்சொல்லி நோட்டீஸ் ஒட்டியது. பரம்பரையாக வாழ்ந்த இடத்தை விட்டு மக்கள் அகதிகளாக வெள்ளலூரிலுள்ள அடிப்படை வசதிகளற்ற அரசு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியது. பேருந்து மற்றும் பணிகளுக்கு செல்ல முடியாமல் துப்புரவு பணியாளர்களும், அவர்களது குழந்தைகள் விளையாடுவது முதல் படிப்பில் உள்ள சிரமங்களை யதார்த்தமாக ஆவணப்படுத்தியுள்ளனர்.

ஆவணப்படம் குறித்து பேசிய சிபிஎம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாலபாரதி குப்பையை கூட்டி குப்பைத்தொட்டியில் போடுவதைப்போல சி எம் சி காலனி மக்களை குப்பையில் மாநகராட்சி போட்டுள்ளது. மேலும் சி எம் சி காலனியில் மட்டும் பிரச்சனையல்ல. இது ஒட்டு மொத்த தமிழகத்திலும் இருப்பதாகவும், கிராமப்புறங்களில் நிறைய வீடுகள் இடிந்த நிலையில் இருப்பதால் அதற்கும் தீர்வு ஏற்பட வேண்டும் என்றார். துப்புறவு பணியாளர்கள் இடமாற்றத்தால் பேருந்து செலவு, கல்வி, காய்கறிகள் உள்ளிட்டவற்றிற்கு மிகவும் சிரமப்படுவார்கள் என்றார். துப்புரவு பணியாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் உள்ளதால் அரசு துப்புறவு பணியாளர்கள் வசிக்கும் பகுதியிலேயே வீடு கட்டி கொடுத்திருக்க வேண்டும் என்றார்.

துப்புரவு தொழிலாளர்களின் பிரச்சனை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஆனது. அது, சாதிய பிரச்சனையாக பார்க்கப்படுவதாக குற்றம் சாட்டினார். சி எம் சி காலனி மக்களின் துயரங்களை விவரிக்கும் இந்த ஆவணப்படத்தை பாலபாரதி வெளியிட பி யு சி எல் தேசிய குழு உறுப்பினர் நா. பாலமுருகன், வழக்கறிஞர் சரவணன், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் நாகராசன் மற்றும் ஜனநாயக சுகாதாரப் பணியாளர்கள் மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.