கோவை,
நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு பிறகும் கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளும் கட்சியினர் அராஜகமான முறையில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

கூட்டுறவு சங்க தேர்தலை ஆளும் கட்சியினர் அரஜாகமான முறையில் கைப்பற்றி வருவது குறித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் தலையிட்டு தேர்தல் முடிவை நிறுத்தி வைத்தது. இதன்பின் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆய்வு செய்து முடிவை அறிவிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து இனி நடைபெறும் கூட்டுறவு சங்க தேர்தல் ஜனநாயகமுறைப்படி நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஆளும் கட்சியினர் மீண்டும் தங்களது அராஜகங்களை அரங்கேற்ற துவங்கியுள்ளனர். மேலும், இவர்களின் அத்துமீறல்களுக்கு அதிகாரிகளும் துணைபோவது எதிர்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படு  இந்நிலையில், சிங்காநல்லூர் கூட்டுறவு கடன் சங்க தேர்தலில்போட்டியிடுவதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பரத்பாபு என்பவர் வேட்பு மனுக்களை பெற்றிருந்தார். இந்நிலையில் சனியன்று அவர் மனுதாக்கல் செய்ய முற்படுகையில் அதிமுகவினர் அவரை அதிகாரிகளை சந்திக்க விடாமல் தடுத்தனர். இதனையடுத்து பெரும் போராட்டத்திற்கு பிறகு அதிகாரியை சந்தித்து வேட்பு மனு அளிக்க முயற்சித்தார். அப்போது விண்ணப்பத்தை வாங்க முடியாது என அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். அங்கு அதிகாரிகளின் டேபிள் அருகே அதிமுகவினர் அமர்ந்து கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட சம்பவமும் அரங்கேறியது அனைத்து கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும், கோவை மாவட்ட சுகாதாரத்துறையில் கூட்டுறவு கடன் சங்க தேர்தலுக்கான விண்ணப்பங்களை ஆளும் கட்சியினர் ஆதரவாளர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு உணவு இடைவேளைக்கு பிறகு மற்றவர்களுக்கு விண்ணப்பம் வழங்குகிறோம் என்று கூறிச்சென்ற அதிகாரிகள் அலுவலகத்திற்கு வராமல் தலைமறைவாகினர். இதேபோல் கோவை உப்பிலிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் அதிகாரிகளின் துணையுடன் அராஜகங்களை அரங்கேற்றினர். ஆளும்கட்சியினரின் இந்த ஜனநாயக விரோத செயலானது நீதிமன்றத்தையும் சேர்த்தே அவமதிப்பதாக உள்ளதாக அனைத்துக் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: