திருவண்ணாமலை,
திருவண்ணாமலை வேளாண் கல்லூரி உதவிப் பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த மாணவி, அது தொடர்பான ஆவணங்களை திங்களன்று (ஆக. 27) காவல்துறை யினரிடம் அளிக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூரில் அரசு வேளாண் கல்லூரி மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு பி.எஸ்சி 2 ஆம் ஆண்டு படிக்கும் சென்னை பெருங்குடியைச் சேர்ந்த மாணவி, தனக்கு கல்லூரியில் உதவிப் பேரா சிரியராகப் பணிபுரியும் தங்கபாண்டியன் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வருவதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து, திரு வண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியிடம் மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படை யில் வானாபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா, டிஎஸ்பி பழனி ஆகியோர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து வெளியே வந்த மாணவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எனக்கு நடந்த அனைத்து கொடுமைகள் குறித்தும் காவல் துறை விசாரணையின் போது எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளேன். இந்த விசாரணை எனக்குதிருப்தி அளிக்கும்படி இல்லை. உதவிப் பேரா சிரியர் தங்கபாண்டியன் எனக்கு அளித்த தொல்லைகளுக்கான ஒட்டுமொத்த ஆதாரமும் என்னிடம் இருக்கும் போது, அவர் என்மீது தவறான குற்றச் சாட்டுகளை கூறுகிறார்.பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணைக்கு நான் கண்டிப்பாக ஒத்துழைப் பேன். விசாரணைக்கு நான் ஒத்துழைக்கவில்லை என்பது தவறான தகவல். இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று பணத்தைக் காட்டி சிலர் என்னை சமாதா னத்துக்கு அழைத்தனர். நான் அதை மறுத்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த பிரச்சனை தொடர்பான ஆதாரங்களை, மாணவி திங்களன்று காவல்துறையினரிடம் அளிக்கின்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.