நியூயார்க்,
வியட்நாம் போரில் சிறை சென்றவரும், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு இருமுறை போட்டியிட்டவரும், அரிசோனா மாநில செனட் உறுப்பினருமான ஜான் மெக்கெயின் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 81. ஜான் மெக்கெயினுக்கு மூளைப் புற்றுநோயான கிளிபோஸ்டோமா எனும் நோய் இருப்பது கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உள்ளூர் நேரப்படி மாலை 4.28 மணிக்குக் காலமானார்.

இதுகுறித்து மெக்கெயின் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அரிசோனா மாநில செனட் உறுப்பினர் ஜான் மெக்கெயின் மூளைப் புற்றுநோயால் ஞாயிறன்று மாலை 4.28 மணிக்குக் காலமானார். கடந்த ஒரு வாரமாக அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை நிறுத்தப்பட்டிருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.  ஜான் சிட்னி மெக்கெயின் கடந்த 1936 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 29 ஆம் தேதி பனாமா கானல் ஜோன் பகுதியில் பிறந்தார். இவரின் முன்னோர்கள் அனைவரும் ராணு வத்தில் பணியாற்றியவர்கள். ஜெனரல் ஜார்ஜ் வாஷிங்டன் காலத்தில் இருந்து ராணுவத்தில் பணியாற்றினார்கள். அந்த அடிப்படை யில், மெக்கெயினும் கடற்படையில் சேர்ந்து பணியாற்றினார். அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான போரின்போது, வியட்நாம் ராணுவ அதிகாரிகளால் சிறை பிடிக்கப்பட்ட கடற்படை அதிகாரி யான மெக்கெயின் 5 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.  அமெரிக்காவுக்கும், வியட் நாமுக்கும் இடையிலான போரின் போது, கைது செய்யப்பட்ட மெக்கெயின், 5 ஆண்டுகள் வியட்நாம் சிறையில் இருந்து, அதன்பின் விடுவிக்கப்பட்டார். கடந்த 30 ஆண்டுகளாக அரிசோனா மாநில செனட்ட ராக மெக்கெயின் இருந்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: