சென்னை:
தமிழகம் முழுவதும் 121 சிறப்பு பிரிவு சி.ஐ.டி. அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ள
னர். அரசுக்கு எதிரான நடவடிக்கைகள், சமூக விரோதச்செயல்கள் உள்ளிட்டவை தொடர்பாக புலனாய்வு செய்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது சிறப்பு பிரிவு சி.ஐ.டி. காவல்துறை
யினரின் பணி. இந்நிலையில் கடந்த 6 மாத காலமாக பணிஓய்வு உள்ளிட்ட காரணங்க
ளால் இத்துறையில் காவலர் கள் பற்றாக்குறை இருந்து வந்தது.

சட்டம்- ஒழுங்கு, ஆயுதப் படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை ஆகிய பிரிவு
களில் இருந்து சிறப்பு பிரிவு சி.ஐ.டி.க்கு மாற விருப்பம் தெரிவித்தவர்களின் திறன் மற்றும் தகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல் வேறு இடங்களில் 121 சிறப்பு பிரிவு சி.ஐ.டி அதிகாரிகளை நியமித்து காவல்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: