சென்னை:
ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி வரை முன்னேறினார்.

அரையிறுதிப்போட்டியில் தோல்வியடைந்தார். இதன்மூலம் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. இதன்படி, ஆசியப் போட்டியில் வெண்கலம் வென்ற பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: