ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், விரைவில் இங்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், தற்போதுள்ள பாஜக எம்எல்ஏ-க்கள் மீண்டும் போட்டியிட்டால், அவர்களில் 60 சதவிகிதம் பேருக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 எம்எல்ஏ-க்களில் பாஜக-வின் பலம் மட்டும் 160 ஆகும்.இந்நிலையில், தேர்தல் வரவிருப்பதையொட்டி, மீண்டும் பழைய எம்எல்ஏ-க்களுக்கே சீட் வழங்கலாமா? என்பது குறித்து பாஜக, தானாகவே ரகசியமாக கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில்தான், 60 சதவிகித எம்எல்ஏ-க்களின் செயல்பாடு சரியில்லை என்றும் அவர்களுக்கு மீண்டும் தேர்தலில் வாய்ப்பளித்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பாஜக தலைமையானது, மேலிடப் பொறுப்பாளர் அவினாஷ் ராய் கன்னா-வை ராஜஸ்தானுக்கு அனுப்பி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.