நீலகிரி;
மசினகுடி அருகே யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள மேலும் 11 ரிசார்ட்டுகளுக்கு, சீல் வைக்கும் நடவடிக்கைக்காக நோட்டீஸ் அளிக்கப்பட் டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் , நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள 27 சொகுசு விடுதிகளுக்கு ஏற்கெனவே சீல் வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் மசினகுடி அருகே பொக்காபுரம், வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 11 ரிசார்ட்டு களுக்கு வருவாய், வனம் மற்றும் காவல்துறை அடங்கிய குழுவினர் நேரில் சென்று நோட்டீசை வழங்கினர்.

24 மணி நேரத்தில் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தவறினால் 11 ரிசார்ட்டுகளுக்கும் சீல் வைக்கப்படும் என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: