சென்னை,

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மைதான் என்று பேராசிரியை நிர்மலாதேவி, ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியைச் சேர்ந்தபேரசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான வழிக்கு அழைத்துச் சென்றதாக ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவத்துவங்கியது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவி மற்றும் உடந்தையாக இருந்த பேராசியர் முருகன்,ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர், நிர்மலா தேவி குரல் மாதிரி பரிசோதனை சென்னையில் நடத்தப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி உள்பட 3 பேரும் பலமுறை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.ஆனால் சி.பி.சி.ஐ.டி தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஜாமீன் வழங்கப்படவில்லை.

மேலும்,நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர்கடந்த மாதம் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில்1160 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையைதாக்கல் செய்தனர். இந்நிலையில் நிர்மலாதேவி தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிப்பதற்கு பதிலாக பெண் டிஐஜி தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கணேசன் என்பவர்சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி குலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு முன்னிலையில் வெள்ளியன்று விசாரணைக்குவந்தது, அப்போதுசிபிசிஐடி பதில் மனுவில்’மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக நிர்மலாதேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். முருகன், கருப்பசாமிக்காகவேபெண்களிடம் பேசியதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து இந்த வழக்கை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Leave A Reply

%d bloggers like this: