தீக்கதிர்

பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் ரகுராம் ராஜன் எச்சரிக்கை..!

புதுதில்லி:
வர்த்தகப் போர் நடக்கும் வேளையில், மூலதனக் கடன் உயர்வு, உயர்
சொத்து விலைகளுடன் ஒரு விஷத்தன மான கலப்பு ஏற்பட்டு உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்
ராஜன் எச்சரித்துள்ளார்.

புளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது: இரண்டு பிரச்சனைகள் அதிகரித்துள்ளன என்பது குறித்து நாம் அனைவரும் அறிவோம். அவை, மூல
தனக் கடன் உயர்வு, சொத்து விலை உயர்வு ஆகியன ஆகும். முந்தைய நெருக்கடிக்கு முன்னதாகவே இவ்விரு பிரச்சனைகளும் அதிகரித்து வந் தன. வர்த்தகம் என்பது ஒட்டுமொத்த உலகையும் உள்ளடக்கிய ஒரு விவகாரம் . அதில் நல்ல விளைவுகளைப் பெறுவது மிக மிக முக்கியமானதாகும். நிச்சயமாக, பேச்சுவார்த்தை நடத்துங்கள். ஆனால் இந்த விவகாரத்தில் அணுஆயுதப் போர்களைத் தூண்டிவிடாதீர்கள் என்று கூறினார்.