லண்டன்:
பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் கேப்டனாகவும்,கோல்  கீப்பராகவும் செயல்பட்டு வரும் ஹியூகோ லோரிஸ் தற்போது டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (இங்கிலீஷ் பிரீமியர் லீக்) அணிக்காக விளையாடி வருகிறார்.

மத்திய லண்டனில் சனியன்று அதிகாலை (இங்கிலாந்து நேரப்படி) ரோந்து சென்ற காவல்துறையினர் லோரிஸின் காரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் லோரிஸ் குடித்துவிட்டு கார் ஓட்டியது தெரிய வரவே,அவரைக் கைது செய்து 7 மணி நேரம் காவலுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு,செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்ற 21-வது உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஹியூகோ லோரிஸின் தலைமையில் களமிறங்கிய பிரான்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: