சென்னை;
இட ஒதுக்கீடு குறித்து தற்போதைய தலைமுறைக்கு போதிய புரிதல் இல்லை என்பதால், அது தொடர்பான சரியான பார்வையோடு, நடப்பாண்டு பள்ளிப் புத்தகத்தில் பாடம் இடம்பெற்றுள்ளதாக, ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் பல்வேறு குழந்தை கள் அமைப்புகளின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டப்பிரிவு முன்னாள் செயலாளரும் தொல்லியல்துறை ஆணையாளருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயச்சந்திரன் பேசியதாவது:

மாணவர்களுக்கு சமூக பிரச்சனைகளை மட்டும் சொல்லாமல், அதற்கான தீர்வை காண வேண்டும் என்ற நோக்கத்துடன் பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஓராண்டாக பாடப்புத்தகங்களை உருவாக்கினோம் என்பதைவிட அதை செதுக்கினோம் என்றே சொல்ல
வேண்டும். வெறுமனே வரலாறுகளை மட்டும் சொல்லாமல், நல்ல புரிதல்களையும் பாடப்புத்தகத்தில் கூறப் பட்டுள்ளது. இட ஒதுக்கீடு குறித்து தற்போதைய தலைமுறைக்கு போதிய புரிதல் இல்லை . அது குறித்து சரியான பார்வையோடு பாடம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.