பெருமழை- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் தீக்கதிர் மதுரைப் பதிப்பு விளம்பரப் பிரிவுப் பொறுப்பாளர் மு.சங்கரநயினார் மற்றும் அவரது சகோதரர் மாரிமுத்து ஆகியோரின் முன் முயற்சியில் நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு வழங்கப்பட்டன.

பி.ஆர்.சி. பட்டாசு உரி மையாளர் இரா.கஜேந்திரன், டி.வி.எஸ். கூட்டுறவு சங்கம் கோமதிநாயகம், டால்மியா சிமெண்ட் மணி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை முத்துவேல், ஆயுள் காப்பீட்டுக் கழகம் சங்கிலி நாயகம், உமா கருணாகரன், தீக்கதிர் பழனி செய்தியாளர் மாலதி ஆகியோரும், தீக்கதிர் நிர்வாகமும் குழந்தைகளுக்கான பால்பவுடர், உணவு, மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் சேகரிப்பில் உதவினர். ஒரு மினி லாரி அளவிலான இந்தப் பொருட்கள் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வண்டிப்பெரியார் பகுதி மக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பீர்மேடு தாலுகாச் செயலாளர் விஜயானந்திடம் நேரில் வழங்கப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: