புதுதில்லி:
தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை ஸதி என்பவருக்கு தேசிய
நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.ஆனால் இந்த ஆண்டில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் பரிந்துரைக்கப்பட்ட  நிலையில்,ஒருவருக்கு மட்டுமே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: