மும்பை:
இந்திய அணியின் முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத் (56) ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்குக் கடந்த மே மாதம் முதல் இடைக்காலப் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.லால்சந்த் ராஜ்புத்தின் பயிற்சியில் திருப்தியடைந்த ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம்,அவரை 3 ஆண்டுகளுக்குத் தலைமை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
லால்சந்த் ராஜ்புத் 3 ஆண்டுகள் நிரந்தரமாக ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் ஒவ்வொரு ஆண்டும் அவரின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள ஒப்பந்த முறை சற்று வித்தியாசமாக இருந்தாலும்,அதனை பற்றிக் கண்டுகொள்ளாத லால்சந்த் ராஜ்புத் பயிற்சியாளராக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்தார்.

லால்சந்த் ராஜ்புத் கடந்த இந்திய அணிக்காக (1985-1987) 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.ஆஃப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராகவும்(2016 -2017),2007-ஆம் ஆண்டில் டி-20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் மேலாளராக இருந்தார் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.