தீக்கதிர்

ஜம்மு காஷ்மீரில் கனமழை: நிலச்சரிவைத் தொடர்ந்து ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்

ஜஙம
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் வெள்ளியன்று இரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் நாட்டின் பிற பகுதிகளை காஷ்மீர் பள்ளத்தாக்குடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் ராம்சு மாகர்கோட் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி சாலைகள் மூடப்பட்டது. இதானல் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பழங்களை ஏற்றி வந்த நூற்றுக்கணக்கான லாரிகள், பயணிகள் வாகனங்கள் நெடுஞ்சாலையில் இரு புறங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் லடாக்- காஷ்மீர் இடையிலான பகுதியில் மட்டும் போக்குவரத்து நடைபெறுகிறது.