திருவனந்தபுரம்

கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் பெரு மழையைத் தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டது. கேரளாவில் உள்ள 14மாவட்டங்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. மேலும் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து மழை குறைந்ததைத் தொடர்ந்து தற்போது புனரமைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரளாவின் சில பகுதிகளில் ஆகஸ்ட் 27 மற்றும் 28ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவில் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 27 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், 28ஆம் தேதி மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய வட கேரள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆனால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. 24 மணி நேர இடைவெளியில் 7 முதல் 11 செ.மீ அளவுக்கான மழை பெய்ய வாய்ப்புள்ள கன மழையாக இது இருக்கும் என்றும், இரவு நேரங்களில் மலைப்பாதையில் பயணிக்க வேண்டாம் , நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது, எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.