தீக்கதிர்

‘கேரளாவிற்கு தேசம் துணை நிற்கிறது’ பிரதமர் மோடி ஓணம் வாழ்த்து…!

புதுதில்லி:
கேரள மக்களைப் புரட்டிப் போட்ட பெரு வெள்ளத்திலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு ஓணம் பண்டிகை ஒரு புதிய வலிமையைத் தரும் என நம்பிக்கை இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அவரது டுவிட்டர் பக்கத்தில் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘‘கேரள மக்களுக்கு இந்திய நாடு உறுதுணையாக இருக்கிறது. இந்த ஓணம் பண்டிகை கடந்த சில நாட்களாக இன்னல்களை எதிர்கொண்டிருக்கும் கேரள மக்களுக்கு மேலும் வலிமையைத் தரலாம். ஒட்டுமொத்த தேசமும் கேரள மக்களுக்கு தோள் கொடுத்து நிற்கிறது. கேரள மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.