சென்னை:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ஆப்பிள் நிறுவனம் ரூ.7 கோடி நிதி வழங்குவதாக சனிக்கிழமையன்று அறிவித்துள்ளது. இந்த வெள்ள பாதிப்புகளில் ஏற்பட்டுள்ள இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்ஸ் ஸ்டோர் மற்றும் ஐ-டியூன் சேவைகளில் அதன் வாடிக்கையாளர்கள் 5 டாலர், 10 டாலர், 25 டாலர், 50 டாலர் , 100 டாலர் மற்றும் 200 டாலர் நன்கொடை அளிக்கும் விதமாகவும் புதிய தொழில்நுட்பத்தை இணைத்துள்ளது.
சென்னை சத்தியமூர்த்திபவனில் சனிக்கிழமையன்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடிக்கு நிவாரணப் பொருட்கள் சேமிக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.