ஆகஸ்ட் 25 சனிக்கிழமை ஓணம் பண்டிகை துவக்க நாளாகும். ஆனால் எப்போதும் பெரும் உற்சாகத்துடன் ஓணம் கொண்டாடும் கேரள மக்கள், வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பிலிருந்து மீண்டெழும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு ஓணம், வெள்ளப் பாதிப்பிலிருந்து மீண்டு புதிய கேரளத்தைப் படைக்க உறுதியேற்கும் நாளாக அமையட்டும் என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளார் முதலமைச்சர் பினராயி விஜயன்.

வெள்ளப் பாதிப்புகளால் கிட்டத்தட்ட கேரளத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஓணம் களையிழந்து காணப்பட்டது. நிவாரண முகாம்களில் சிறிய கோலங்கள் போட்டு மக்கள் கொண்டாடினர். தெக்கின்காடு என்ற பகுதியில் 69 வயது மூதாட்டி சரஸ்வதியம்மா, ஓணப் பொருட்களை வாங்குவதற்கு யாரேனும் வாடிக்கையாளர்கள் வரமாட்டார்களா என காத்திருந்த காட்சி.

Leave A Reply

%d bloggers like this: