தீக்கதிர்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு…!

ஒகேனக்கல்:
ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.வெள்ளியன்று இரவு நீர் வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக இருந்தது. 25 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் அங்கு குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை 48 ஆவது நாளாக நீடிக்கிறது.