புதுதில்லி:
‘சுவையான மாட்டிறைச்சி உணவு தயாரிப்பது எப்படி?’ என்ற சமையல் குறிப்பை, இந்து மகாசபையின் இணையதளத்தில் பதிவேற்றி, கேரளத்தைச் சேர்ந்த ‘சைபர் வாரியர்ஸ்’ அதிர்ச்சி அளித்துள்ளனர்.

நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளம் மழை- வெள்ளப் பாதிப்பைச் சந்தித்த நிலையில், அம்மாநில மக்களின் துயரைத் துடைக்கும் வகையில், நாடு முழுவதிலுமிருந்து உதவிக்கரங்கள் நீண்டன. ஆனால், மாட்டிறைச்சி சாப்பிடும் கேரள மக்களுக்கு யாரும் உதவ வேண்டாம் என்று இந்து மகாசபையைச் சேர்ந்த சக்ரபாணி என்ற சாமியார் மட்டமாக நடந்து கொண்டார். மேலும், கேரள மக்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதே வெள்ளத்திற்கு காரணம் என்றும் சக்ரபாணி வன்மம் கக்கினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், கேரளத்தைச் சேர்ந்த ‘கேரளா சைபர் வாரியர்ஸ்’ என்ற ஹேக்கிங் டீம், ‘அகில பாரதிய இந்து மகாசபை’ இணையதளத்தை முடக்கி, அதில் “சுவையான கேரளா ஸ்டைல் மாட்டிறைச்சி சமைத்து உண்பது எப்படி?” என்ற சமையல் குறிப்பை பதிவேற்றி, சாமியார் சக்ரபாணிக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

மாட்டிறைச்சி உண்பவர்கள் பற்றி தவறான கருத்துகளை பதிவிட்ட சக்ரபாணியை கண்டிப்பதாகவும், அந்த இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: