ஹைதராபாத்;
தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பள உயர்வு கோவில் அர்ச்சகர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக இருக்கிறார்.இந்நிலையில் மாநிலத்தில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து கோவில்களில் உள்ள அர்ச்சகர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பள உயர்வை அறிவித்து இருக்கிறார். மேலும் கோவில் அர்ச்சகர்களின் ஓய்வுபெறும் வயதை 58-இல் இருந்து 65 ஆக உயர்த்தி ஆணை பிறப்பித்து இருக்கிறார்.

இதேபோல் மசூதியில் உள்ள இமாம்களுக்கான மாத ஊதியமும் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இமாம்களுக்கு ரூ. 1,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: