மும்பை
இந்தியாவில் 2013 முதல் 2015 வரையில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் புள்ளி விபரம் வெளியாகியிருக்கிறது. அதன்படி பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகளவில் விவசாயிகள் வாழ வழியின்றி தற்கொலை செய்து வருகின்றனர் என தெரிய வந்திருக்கிறது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2013 முதல் 2015 ம் ஆண்டு வரையில் தற்கொலை செய்து கொண்டவர்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 11 ஆயிரத்து 441 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர். அதற்கு அடுத்தாக கர்நாடகத்தில் 3 ஆயிரத்து 740 பேர் தற்கொலைசெய்திருக்கின்றனர். உத்திரபிரதேசத்தில் 3 ஆயிரத்து 578 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர். அந்த பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் ஆயிரத்து 606 பேர் தற்கொலை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
1995ம் ஆணடு முதல் தற்போது வெளிவந்திருக்கும் 2015ம் ஆண்டுக் கணக்குப்படி இதுவரை இந்தியாவில் 3 லட்சத்து 10 ஆயிரம் விவசாயிள் தற்கொலை செய்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணாக கடந்த மூன்று ஆண்டுகளில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை எவ்வளவு என்பதை வெளியிட மறுத்து வருகிறது.
ஆனால் 2018ம் ஆண்டு ஜனவரி துவங்கி மார்ச் வரையிலான 3 மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 696 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் அந்த மாநிலத்தை ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு முழுமையான நிவாரண வழங்க மறுத்து வருகிறது. அதே நேரத்தில் ஒயின் தயாரிக்கும் சாராய ஆலைகள் 2006ம் ஆண்டும் முதல் செலுத்த வேண்டிய கலால் வரி பாக்கி ரூ.118.30 கோடிடிய ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுஇருக்கிறது. இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிபை உருவாக்கியிருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: