பாட்னா :

முசாபர்பூர் விடுதி மாணவிகள் கொலை வழக்கின் விசாரணை அதிகாரிகளை இடமாற்றம் செய்வததற்கு காரணம் என்ன என சிபிஐக்கு பாட்னா உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் நடத்தப்பட்டு வந்த விடுதி ஒன்றில் மாணவிகள் மற்றும் சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு பாட்னா உயர்நீதிமன்றம் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றியது. இவ்வழக்கின் முதல் விசாரணைக்கு 2 நாட்களே உள்ள நிலையில் விசாரணை அதிகாரியை பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வழக்கு விசாரணையில் வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி முகேஷ் ஆர் ஷா மற்றும் நீதிபதி ரவி ரஞ்சன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை தொடங்கப்பட்டு 2 வாரங்களே ஆன நிலையில் இவ்வழக்கின் விசாரணை அதிகாரிகளை இட மாற்றம் செய்வதற்கான காரணம் என்ன? ஏன் இது செய்யப்பட்டது? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டதோடு, தற்போது வரை நடத்தப்பட்டுள்ள விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27 தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும், வழக்கு விசாரணை தொடர்பான செய்திகளை ஒளிபரப்ப வேண்டாம் என ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.