ஜகார்த்தா:
இந்தோனேஷியா லோம்போக் தீவில் கடந்த ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 19 ஆகிய தேதிகளுக்கு இடையே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேஷியா லோம்போக் தீவில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி 6.4 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, தீவை சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பின்னதிர்வுகள் உணரப்பட்டன. அதில் ஒரு சில அதிர்வுகள் 5.9 ரிக்டர் அளவு கோலில் பதிவானது. மிகவும் மோசமான அதிர்வு ஆகஸ்ட் 5 ஆம் தேதி 6.9 ரிக்டர் அளவு கோலில் பதிவானது. இதனால், சுமார் 460-க்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர்  மீட்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுடோப்போ பூர்வோ டுவிட்டரில் தெரிவித்துள் ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.